‘எல்சாட்’ | Kalvimalar - News

‘எல்சாட்’

எழுத்தின் அளவு :

அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் சட்டப்படிப்பு பயில விரும்பும் இந்திய மாணவர்கள் ‘லா ஸ்கூல் அட்மிஷன் கவுன்சில்’ நடத்தும் ‘எல்சாட்’ எனும் தேர்வைத் தவறாமல் எழுத @வண்டும்!

முக்கியத்துவம்
‘லா ஸ்கூல் அட்மிஷன் கவுன்சில்’, இந்தியாவில் இருக்கும் சில கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் தேர்வை நடத்துகிறது. அமெரிக்கா மட்டுமின்றி கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலும் பல கல்வி நிறுவனங்கள், இத்தேர் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.

மே/ ஜூன், செப்டம்பர்/அக்டோபர், டிசம்பர் மற்றும் பிப்ரவரி என ஆண்டிற்கு நான்கு முறை இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

தகுதி: இந்தத் தேர்வினை எழுத, 12ம் வகுப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி..

வயது: வயது வரம்பு இல்லை. ஆனால் சேர்க்கை பெற விரும்பும் கல்வி நிறுவனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் வயது வரம்பிற்கேற்க மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

தேர்வு முறை: எழுத்துவழியில் நடைபெறும் இத்தேர்வில் கேட்கப்படும் மல்டிபில் சாய்ஸ் கேள்விகளுக்கு 2.20 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும். தவறான பதிலுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படுவது இல்லை. அனாலிடிக்கல் ரீசனிங், லாஜிக்கல் ரீசனிங் 1, லாஜிக்கல் ரீசனிங் 2 மற்றும் ரீடிங் காம்பிரிகென்ஷன் என 4 பிரிவுகளாக நடைபெறும் இத்தேர்வின் ஒவ்வொரு பிரிவிலும், 25 கேள்விகள் கேட்கப்படும். ஒரு பிரிவிற்கு பதிலளிக்க 35 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும்.
 
தேர்வு மையங்கள்: தென் மாநிலங்களில், சென்னை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 4

தேர்வு நாள்: மே 20

விபரங்களுக்கு: www.lsac.org

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us