என்.டி.ஆர்.ஐ.,ல் அட்மிஷன் | Kalvimalar - News

என்.டி.ஆர்.ஐ.,ல் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

இந்திய அரசின் நேஷனல் டெய்ரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் பிஎச்.டி., மற்றும் டிப்ளமா படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்: பிஎச்.டி., மற்றும் டிப்ளமா

தகுதி:
பிஎச்.டி., படிப்பில் சேர, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில், துறை சார்ந்த முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  மேலும், முதுநிலை படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

டிப்ளமா படிப்பில் சேர, 12ம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பிஎச்.டி., படிப்பிற்கு 21 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். டிப்ளமா படிப்பிற்கு 17 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும். இந்தியாவில் உள்ள ஏழு தேர்வு மையங்களில் இதற்கான நுழைவுத் தேர்வு, ஆன்லைன் வழியில் நடைபெறும். அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே அட்மிஷன் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 1

தேர்வு நாள்: மே 20

விபரங்களுக்கு: www.ndri.res.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us