கலபுரகி: முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்பில் சேர்ந்த மாணவியர், தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்தனர்.
கலபுரகியில் சரண்பசவா பல்கலைக் கழகம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொறியியல் படிப்பின் முதலாம் ஆண்டு மாணவர்கள், கல்லுாரியின் முதல் நாளில், தங்களின் பெற்றோருக்கு பாதபூஜை செய்வர். அதுபோன்று, நடப்பாண்டும் நேற்றும் பல்கலைக்கழகத்தின் தொட்டப்பா சபா மண்டபத்தில் நிகழ்ச்சி நடந்தது. பொறியியல் மாணவியர், தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்தனர். அப்போது அவர்கள் உணர்ச்சி வசப்பட்டனர்.
ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள் என பெற்றோரை கட்டிப்பிடித்து மாணவியர் கண்ணீர் விட்டனர். பின், மாணவியர், ஆசிரியர்களுக்கு வணக்கம் செலுத்தி, தங்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.
பெற்றோர் கூறுகையில், எங்களை உணர்ச்சிவசப்பட வைத்த பல்கலைக் கழகத்துக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி. பிள்ளைகளுக்கு படிப்புடன், கலாச்சாரத்தையும் கற்றுக் கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றனர்.