புட்வேர் டிசைனிங் அட்மிஷன் | Kalvimalar - News

புட்வேர் டிசைனிங் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

சென்னை உட்பட இந்திய முழுவதிலும் உள்ள எட்டு புட்வேர் டிசைனிங் மற்றும் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட்டில் சேர்க்கை பெறுவதற்கான, ஆல் இந்தியா செலக்சன் டெஸ்ட் (ஏ.ஐ.எஸ்.டி.,) எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

படிப்புகள்: இளநிலை (4 ஆண்டுகள்), முதுநிலை (2 ஆண்டுகள்), ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் (5 ஆண்டுகள்),

தகுதி:
இளநிலை - பள்ளிப் படிப்பு முடித்திருக்க வேண்டும், இந்த ஆண்டு 12ம் வகுப்புத் தேர்வு எழுதி உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

முதுநிலை - இன்ஜினியரிங், கலை, எல்.ஜி.ஏ.டி அல்லது புட்வேர் டிசைனிங் சார்ந்த துறைகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25 வயதிற்குள் இருப்பவர் மட்டுமே இளநிலை படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும். முதுநிலை படிப்பிற்கு வயது வரம்பு இல்லை,

சேர்க்கை முறை: கணினி வழி தேர்வாக மட்டுமே நடைபெறும், ஏ.ஐ.எஸ்.டி., தேர்வில் ஒரு மதிப்பெண் கொண்ட மல்டிப்பிள் சாய்ஸ் கேள்விகள் கேட்கப்படும். இந்த ஏ.ஐ.எஸ்.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் கல்லூரிகள் ஒதுக்கப்படும்.
 
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 22

தேர்வு நாள்: ஏப்ரல் 27, 28 மற்றும் 29

விபரங்களுக்கு: www.fddiindia.com

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us