‘டான்செட்’ அறிவிப்பு | Kalvimalar - News

‘டான்செட்’ அறிவிப்பு

எழுத்தின் அளவு :

பல்வேறு முதுநிலை படிப்புகளில், தமிழக கல்வி நிறுவனங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கை பெறுவதற்காக, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் ‘டான்செட்’ தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

படிப்புகள்: எம்.டெக்., எம்.இ., எம்.ஆர்க்., எம்.பிளான்., எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ.,

தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: ‘டான்செட்’ தேர்வு எழுத விரும்புவோர் ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். நூறு ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1/3 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 23

தேர்வு நாள்: மே 19 மற்றும் 20

விபரங்களுக்கு: www.annauniv.edu/tancet2018

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us