லக்னோ பல்கலையில் அட்மிஷன் | Kalvimalar - News

லக்னோ பல்கலையில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

உத்திர பிரதேச மாநிலத்தின் லக்னோ பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்: பி.ஏ., பி.காம்., எல்.எல்.பி., பி.எஸ்சி., பி.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., எல்.எல்.எம்.,

தகுதி: இளநிலை படிப்பிற்கு 12ம் வகுப்பு பொது தேர்வில் 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும், முதுநிலை படிப்பிற்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். நூறு மல்ட்டி சாய்ஸ் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண்களும் குறைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: லக்னோ பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இளநிலை படிப்புகள்- ஏப்ரல் 20. முதுநிலை படிப்புகள்- ஏப்ரல் 15

தேர்வு நாள்: இளநிலை படிப்புகள்- மே 2 முதல் 10 வரை. முதுநிலை படிப்புகள் - ஜூன் 4 முதல் 11 வரை.

விபரங்களுக்கு: www.lkouniv.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us