புதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

புதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான, புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, டிப்ளமா மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்: கலை, அறிவியல், சட்டம், மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளில் பி.ஜி.,டிப்ளமா, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பிஎச்.டி., படிப்புகள்.

தகுதி: தேர்வு செய்யப்படும் படிப்பிற்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். முதுநிலை மற்றும் பி.ஜி.,டிப்ளமா படிப்பிற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இளநிலை பட்டத்தில் 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி., படிப்பிற்கு முதுநிலை பட்டப்படிப்பில் 55சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: ஆன்லைன் நுழைவுத் தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 100 மல்டிப்பில் சாய்ஸ் கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஏப்ரல் 24

தேர்வு நாள்: மே 25, 26 மற்றும் 27

விபரங்களுக்கு: www.pondiuni.edu.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us