எய்ம்ஸ் அட்மிஷன் | Kalvimalar - News

எய்ம்ஸ் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

டில்லி உட்பட 7 நகரங்களில் உள்ள ஆல் இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் எனும் எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தில், பல்வேறு துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்: பி.எஸ்சி.,-நர்சிங், ஆப்தோமெட்ரி, மெடிக்கல் டெக்னாலஜி இன் ரேடியோகிராபி, டென்டல் ஹைஜீன், அப்ரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, எம்.எஸ்.சி., -நர்சிங் மற்றும் பல்வேறு படிப்புகள்.

தகுதி: இளநிலை பட்டப்படிப்புகளுக்கு 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களை பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை நர்சிங் படிப்பிற்கு, பி.எஸ்சி.,-நர்சிங் முடித்திருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: பிரத்யேக நுழைவுத் தேர்வுகள் மூலமே பெரும்பாலான படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இடம்பெறுகிறது. ஒவ்வொரு மூன்று தவறான பதில்களுக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஏப்ரல் 12

விபரங்களுக்கு: www.nursing.aiimsexams.org

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us