நடிக்க கற்கலாம் | Kalvimalar - News

நடிக்க கற்கலாம்

எழுத்தின் அளவு :

மத்திய பண்பாட்டு அமைச்சகத்தின்கீழ், தன்னாட்சி கல்வி நிறுவனமாக புதுடில்லியில் செயல்படும், என்.எஸ்.டி., எனும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்பு: டிப்ளமா இன் டிராமாடிக் ஆர்ட்ஸ் - 3 ஆண்டுகள்

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகள் விலக்கு உண்டு.

சேர்க்கை முறை: மாணவர் சேர்க்கையில் இரண்டு விதமான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
முதல்நிலை - செயல்முறை தேர்வில் வெற்றி பெறவேண்டும்.
இரண்டாம் நிலை - ஐந்து நாட்கள் கொண்ட பயிற்சி தேர்வில் பங்கேற்க வேண்டும். இவ்விரு நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதியாக, நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு தேர்வு செய்ப்படுவர்.

உதவித்தொகை: தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 16

சென்னையில் தேர்வு நடைபெறும் நாள்: மே 22

விபரங்களுக்கு: https://nsd.gov.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us