மே 5ல் நீட் தேர்வு ஜூனில் ரிசல்ட் | Kalvimalar - News

மே 5ல் நீட் தேர்வு ஜூனில் ரிசல்ட்செப்டம்பர் 20,2023,09:24 IST

எழுத்தின் அளவு :

சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே, 5ல் நடக்கும்; ஜூன் 2வது வாரம் ரிசல்ட் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தேர்வு அட்டவணை விபரம்:


* ஐ.ஐ.டி., உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் சேர்க்கைக்கான ஜே.இ.இ., மெயின் முதற்கட்ட தேர்வு, ஜன., 24ல் இருந்து பிப்.,1க்குள்ளும், இரண்டாம் கட்ட தேர்வு, ஏப்.,1ல் இருந்து, 15க்குள்ளும் நடத்தப்படும்


* எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு, மே, 5ல் நடத்தப்படும்


* பேராசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மாணவர் உதவி தொகைக்கான நெட் முதற்கட்ட தேர்வு, ஜூன், 10 முதல், 21க்குள் நடக்கும்


* மத்திய அரசின் கலை, அறிவியல் படிப்புக்கான பல்கலைகளில் சேருவதற்கான, கியூட் நுழைவு தேர்வில், இளநிலை சேர்க்கைக்கான தேர்வு, மே, 15 முதல், 31க்குள்ளும்; முதுநிலை சேர்க்கைக்கான தேர்வு, மார்ச், 11 முதல், 28க்குள்ளும் நடக்கும்


* இந்த தேர்வுகளில், நீட் மட்டும் எழுத்து தேர்வாகவும், மற்றவை கணினி வழி தேர்வாகவும் நடத்தப்படும்


* நீட் தேர்வு முடிவுகள், ஜூன் 2ம் வாரமும்; மற்ற தேர்வுகளின் முடிவுகள், தேர்வு முடிந்து மூன்று வாரங்களுக்குள் வெளியிடப்படும்


* தேர்வு குறித்த தகவல்கள், விண்ணப்ப பதிவு துவங்கும் அறிவிப்புடன் வெளியாகும். கூடுதல் விபரங்களை, www.nta.ac.in/ என்ற தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us