சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பலகலைகழக தாவரவியல் துறையில், தாவரவியல் பேரவை துவக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது.
தாவரவியல் துறைத் தலைவர் தமிழினியன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ரவீந்திரன் வரவேற்றார். துணைவேந்தர் கதிரேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தாவரவியல் பேரவையை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பதிவாளர் சிங்காரவேலன் சிறப்புரையாற்றினார். தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், ஆட்சிமன்ற உறுப்பனர்கள் அருட்செல்வி, பாரி மற்றும் புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், துணைவேந்தரின் நேர்முக செயலர் பாக்கியராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் ரத்தினசம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பேராசிரியர் முல்லைநாதன் நன்றி கூறினார்.