திட்டக்குடி: அர்ச்சகர் பயிற்சி முடித்த இரு பெண்கள் உட்பட மூவர், அமைச்சர் கணேசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த மேலா தனுார் கிராமத்தைச் சேர்ந்த ரம்யா, 23, கிருஷ்ண வேணி, 23, மற்றும் குமரவேல், 23, ஆகியோர், ஸ்ரீரங்கம் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றனர். தமிழக அளவில் தேர்வான மூன்று பெண்களில், இரண்டு பேர் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூவரும், அமைச்சர் கணேசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசனும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மூன்று பேரையும் வாழ்த்தினார்.