சென்னை: ஆறு முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நாளை காலாண்டு தேர்வு துவங்குகிறது. அனைத்து வகுப்புகளுக்கும், ஒரே வினாத்தாள் வழங்கப்படுகிறது.
பள்ளிக்கல்வி துறை பாடத்திட்டத்தில், இந்த ஆண்டில் இருந்து, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும், முப்பருவ தேர்வுகளில், மாநிலம் முழுவதற்கும் ஒரே வினாத்தாள் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, நாளை காலாண்டு தேர்வு துவங்க உள்ளது. இதற்கு சென்னையில் இருந்து, அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வினாத்தாள் தயாரித்து, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பொது தேர்வு போன்று ஒரே வினாத்தாள் வழங்குவதால் வினாத்தாள் லீக் ஆகாமல் எச்சரிக்கையுடன் அச்சிட்டு வழங்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.