சென்னை: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV பணிகளில் அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 21ம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV பணிகளில் அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை சென்னை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள்/ஒட்டு மொத்த தரவரிசை எண்/ இட ஒதுக்கீட்டு விதி மற்றும் இப்பதவிக்கான காலிப் பணியிடங்களிலன் அடிப்படையில் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் விவரங்களை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே விவரம் தெரிவிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பது உறுதி அளிக்க இயலாது.
விண்ணப்பதாரர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்திற்கு வரத் தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்ப்டுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.