சைக்கோமெட்ரிக் தேர்வுகளில் பொதுவாக 3 பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஆப்டிடியூட் டெஸ்டிங் மற்றம் பர்சனாலிடி கேள்விகள் என்பவை இவை. இவற்றில் எபிலிடி டெஸ்ட் பகுதியில் கணிதம், வெர்பல் திறன், நான் வெர்பல் திறன், ஸ்பேஷியல் திறன் ஆகிய பகுதிகள் இடம் பெறுகின்றன. ஆப்டிடியூட் டெஸ்டிங்கில் ஒரு பணிக்குத் தேவையான இன்டர்பர்சனல் பிஹேவியர் என்னும் பழகும் திறனை சோதிக்கும் கேள்விகள்இடம் பெறுகின்றன.
என்.டி.பி.சி., போன்றவற்றில் இன்ஜினியர்களைத் தேர்வு செய்தவற்காக நடத்தப்படும் தேர்வுகளில் துறை அறிவு மற்றும் எக்சிகியூடிவ் ஆப்டிடியூட் ஆகிய தேர்வுப் பகுதிகளில் தகுதி பெற்றவருக்கு மட்டுமே சைக்கோமெட்ரிக் தேர்வு நடத்தப்படுகிறது. இவை நிறுவனத்தில் பணி புரிவதற்குத் தேவைப்படும் பர்சனாலிடி தொடர்புடையதாக இருப்பதால் நாம் சரியாக பதிலளிக்க வேண்டும்.