பிளஸ் 2 முடிக்கவுள்ளேன். அடுத்ததாக ஹோம்சயின்ஸ் அல்லது நியூட்ரிஷன் டயடிக்ஸ் படிக்க விரும்புகிறேன். இத்துறையின் வாய்ப்புகள் பற்றிக் கூற முடியுமா? | Kalvimalar - News

பிளஸ் 2 முடிக்கவுள்ளேன். அடுத்ததாக ஹோம்சயின்ஸ் அல்லது நியூட்ரிஷன் டயடிக்ஸ் படிக்க விரும்புகிறேன். இத்துறையின் வாய்ப்புகள் பற்றிக் கூற முடியுமா?பிப்ரவரி 15,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

கடந்த சில ஆண்டுகளாகவே அனைத்து மாணவர்களுமே ஐ.டி., துறையை நோக்கி செல்லும் போது உங்களது ஆர்வம் வியப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியைத் தருவதாகவும் உள்ளது. ஹோம் சயின்ஸ் துறையின் சிறப்புப் படிப்பு தான் நியூட்ரிஷன் அண்ட் டயடிக்ஸ். இதைப் படிப்பவர்கள் பின்வரும் வேலைகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

ஹெல்த்கேர்: கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளிலும் கிளினிக்குகளிலும் இன்று நியூட்ரிஷன் டயடிக்ஸ் படித்தவர்கள் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். இவர்கள் தெரபடிக்ஸ், உணவு மேலாண்மை மற்றும் பாடம் நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

சமூக நலம்: வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளில் நியூட்ரிஷன் டயடிக்ஸ் படித்தவர்களுக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. இந்தியா போன்ற பெரிய மக்கள் தொகை கொண்ட நாடுகளில் உடல் நலம் பேணுவதில் நியூட்ரிஷன் முக்கியத்துவம் பெறுகிறது.

நிறுவன உணவகங்கள்: பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் இன்று கேன்டீன்கள் இல்லாமலில்லை. அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடல்நலத்தை மேம்படுத்திப் பராமரிப்பதற்காக நியூட்ரிஷனிஸ்டுகள் பணிக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறார்கள்.

உணவுச் சேவை: புதிது புதிதாக உணவு வகைகளை உருவாக்குவது மற்றும் அறிமுகப்படுத்துவது போன்ற பணிகளை இத்துறையினர் மேற்கொள்கின்றனர். உடல் நலத்திற்கேற்ற உணவு வகைகள் அவ்வப் போது உருவாக்கப்படுகின்றன.

மாஸ் மீடியா: இன்று  பத்திரிகைகள், ‘டிவி’ ரேடியோ, எப்.எம்., நிலையங்கள் என எந்த மீடியாவை எடுத்துக் கொண்டாலும் அதில் நியூட்ரிஷனிஸ்டுகள் பொது மக்களிடம் உணவு மற்றும் உடல் நல மேம் பாட்டில் அவற்றின் பங்கு ஆகியவை பற்றி சிறப்பு நிகழ்ச்சிகளைத் தருவதைக் காண்கிறோம்.

ஆய்வு மற்றும் வளர்ச்சி: ரெடி-டு-ஈட் உணவு வகைகளை எம்.டி.ஆர்., போன்ற புகழ் பெற்ற உணவு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. பேக்கிங் செய்யப்பட்டு நீண்ட நாட்களுக்கு இந்த உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமலும் சத்தை இழக்காமலும் இருப்பதற்கான ஆய்வுகளில் இத் துறையினர் தான் ஈடுபடுகின்றனர்.

பி.எஸ்சி., ஹோம்சயின்ஸ் படித்து விட்டு பட்ட மேற்படிப்பாகவோ டிப்ளமோ படிப்பாகவோ நியூட்ரிஷன் படிப்பை ஒருவர் மேற்கொள்ளலாம். மாதம் ரூ.8 ஆயிரத்தில் தொடங்கி ஒருவரது திறனுக்கேற்ப சம்பளம் தரும் துறை இது. இக்னோ, பெங்களூரு பல்கலைக்கழகம், உஸ்மானியா பல்கலைக்கழகம், டில்லி பல்கலைக் கழகம் போன்ற எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் இதில் படிப்புகளைத் தருகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us