புள்ளியியல் துறைக்கான படிப்பைத் தான் படிக்கிறீர்கள். யு.பி.எஸ்.சி., நடத்தும் இந்திய புள்ளியியல் சேவைத் தேர்வை நீங்கள் பட்ட மேற்படிப்பு முடித்தபின் எழுதி சிறப்பான அதிகாரி நிலைப் பணிக்குச் செல்ல முடியும்.
இத்தேர்வில் முழுக்க முழுக்க புள்ளியியல் தொடர்பான தாள் ஒன்று இடம் பெறும். எனவே இப்போதிருந்தே இத்தேர்வு தொடர்பான பாடத்திட்டத்தை நன்றாக அறிந்து அதற்கேற்ப தயாராகிக் கொள்ளவும். மேலும் எஸ்.எஸ்.சி., நடத்தும் புள்ளியியல் ஆய்வாளர் பணித் தேர்விலும் நீங்கள் பட்டப்படிப்பு முடித்தபின்பு கலந்து கொள்ளலாம்.