மொபைல் போன்ற உபகரணங்களில் விளையாடப்படும் கேம்களை உருவாக்கும் துறை வாய்ப்புகளைக் கொண்ட துறைதானா? | Kalvimalar - News

மொபைல் போன்ற உபகரணங்களில் விளையாடப்படும் கேம்களை உருவாக்கும் துறை வாய்ப்புகளைக் கொண்ட துறைதானா?பிப்ரவரி 07,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

தற்போது கேம் டெஸ்டிங் பிரிவில் ஓராண்டு படிப்பைப் படித்து வரும் நீங்கள் துறையின் எதிர்காலம் பற்றிய கவலை கொள்ள வேண்டாம். இந்தியாவில் கேம் டெஸ்டிங் என்பது வேகமாக வளரும் துறை என்பதில் சந்தேகமில்லை. கேம்களை மொபைல் ஆபரேட்டர்களும் சரி இவர்களின் கன்டென்ட் டெவலப்பர்களும் சரி மிகவும் கவனமாக வளர்த்து வருகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் இத்துறை படு வேகத்தில் வளர்ந்து வருகிறது. எனவே இந்தியாவிலும் சீனாவிலும் கடை விரிக்க பன்னாட்டு கேம் டெஸ்டிங் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

இந்தியா கேம்ஸ், துருவா இன்டர் ஆக்டிவ், பாரடாக்ஸ், மொபைல்2வின் போன்ற கேம் நிறுவனங்கள் இந்தியாவில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இது போன்ற நிறுவனங்களில் நீங்கள் சிறப்பான வேலை வாய்ப்பைப் பெறலாம். எனவே உங்களது தற்போதைய படிப்பு பற்றிய நல்ல நம்பிக்கையை எப்போதும் நீங்கள் கொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us