ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை | Kalvimalar - News

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைஜூன் 06,2023,22:00 IST

எழுத்தின் அளவு :

மேட்டுப்பாளையம்: சீதாராமர் கோவில் சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.காரமடை அருகே உள்ள மருதுார் சீதாராம பாத சேவா அறக்கட்டளை சீதா ராமா கோவில் செயல்பட்டு வருகிறது.இந்த கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் மூன்றாவது சனிக்கிழமை சிறப்பு பூஜை அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மருதுார் செல்லப்பனுார்புங்கம்பாளையம் கணுவா பாளையம் ஆகிய நான்கு கிராமங்களில் இருந்து தேர்வு செய்த பள்ளி குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1,000 வீதம் 15 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அறக்கட்டளை ஆலோசனை குழு தலைவர் ஜெயராமன் வழங்கினார். அர்ச்சகர் சூரிய நாராயணன் கூறுகையில், &'&'சுற்றுப்புற கிராமங்களில் நிறைய மாணவர்கள் கல்வி கற்பதற்கு பணம் இல்லாமல் சிரமப்படும் நிலையில் உள்ளனர். இதனால் கோவில் மூலம் இயன்ற அளவு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த ஆண்டைப்போலவே, 15 மாணவர்களுக்கு இந்த ஆண்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது,&'&'என்றார்.Advertisement

வாசகர் கருத்து

Scholarship rupees aivlo
by Sivanesan ,India    2023-07-02 14:07:33 14:07:33 IST
Sivanesan scholarship ella anaku sari pakanum
by Sivanesan ,India    2023-07-02 14:05:39 14:05:39 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us