நீட் அல்லாத படிப்புகள்: 13,268 பேர் சென்டாக் ஆன்லைனில் பதிவு | Kalvimalar - News

நீட் அல்லாத படிப்புகள்: 13,268 பேர் சென்டாக் ஆன்லைனில் பதிவுஜூன் 05,2023,16:38 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி: நீட் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் ஆன்லைனில் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. பதிவு செய்துள்ள 13,268 பேரில் 10760 பேர் தங்களுடைய விண்ணப்பத்தினை முழுவதுமாக பூர்த்தி செய்து சமர்பித்துள்ளனர்.



புதுச்சேரி மாநிலத்தில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான நீட் அல்லாத படிப்புகளுக்கு கடந்த மாதம் 17 ம் தேதி முதல் சென்டாக் விண்ணப்பங்களை ஆன்லைனில் வரவேற்று வருகின்றது. 


இதனையடுத்து, இளநிலை தொழில்முறை படிப்புகளான பி.டெக், பி.எஸ்சி., (விவசாயம், நர்சிங்), பிசியோதெரபி, பி.பார்ம், பி.ஏ., எல்.எல்.பி., (சட்டம்), மற்றும் பட்டய படிப்புகள், இளங்கலை அறிவியல் மற்றும் வணிக படிப்புகள் (பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ.) மற்றும் இளநிலை நுண்கலை படிப்புகளுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் சமர்ப்பித்து வந்தனர். 



நீட் அல்லாத படிப்புகளுக்கு இந்தாண்டும் வழக்கம்போல் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றது. நேற்று வரை 13,268 பேர் விண்ணப்பிக்க பதிவு செய்துள்ளனர். இவர்களில் 10760 பேர் தங்களுடைய விண்ணப்பத்தினை முழுவதுமாக பூர்த்தி செய்து சமர்பித்துவிட்டனர்.



கலை அறிவியல் படிப்புகளுக்கு 3126 பேரும்,தொழில் படிப்புகளுக்கு 4450 பேரும், கலை அறிவியல் தொழில் படிப்பு என இரண்டிற்கும் சேர்த்து 3184 விண்ணப்பித்துள்ளனர். இதேபோல் உயிரியல் சார்ந்த படிப்புகளுக்கு 4426 பேரும், பி.பார்ம்-3695, அக்ரி-2463, பி.டெக்.,-4795, சட்டம்-1112, டி.ஐ.பி.,-1359, டி.ஏ.என்.எம்.,-764 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.



மாநில வாரியாக ஒப்பிடும்போது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 8873 விண்ணப்பங்கள்,பிற மாநிலங்களில் இருந்து 1882, என்.ஆர்.ஐ.,-4, ஓ.சி.ஐ.,-1, விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. சிறப்பு இட ஒதுக்கீட்டு இடங்களை பார்க்கும்போது கிராமப்புறங்களில் இருந்து 779 பேரும், பிராந்தியங்களில் இருந்து-1025 விண்ணப்பங்கள் வந்துள்ளன. விளையாட்டு வீரர்கள் பிரிவுக்கு 372, முன்னாள் ராணுவ வீரர் பிரிவில்-28, மாற்றுதிறனாளி-35, விடுதலை போராட்ட வீரர்-101, விவசாயி-7 பேர் விண்ணப்பித்துள்ளனர்.



விண்ணப்பம் சமர்பித்துள்ள 10,760 மாணவர்களில் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 9513 பேர் விண்ணப்பித்துள்ளனர்.சி.பி.எஸ்.இ.,பாடத்தின் கீழ் 963 பேரும்,கேரளா மாநில பாடத்திட்டத்தின் கீழ் 94 பேரும், சி.ஐ.எஸ்.சி.இ., பாடத்திட்டத்தின் கீழ் 20 பேரும்,ஆந்திரா மாநில பாட திட்டத்தின் கீழ்-125,இடைநிலை வாரிய பாடத்திட்டத்தின் கீழ் 18 பேர் விண்ணப்பித்துள்ளனர்.



நாளையுடன் கடைசி



நீட் அல்லாத படிப்புகளுக்கு நாளை 6ம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.எனவே கடைசி நேர பதட்டத்தில் சிக்காமல் இன்றே திட்டமிட்டு மாணவ மாணவிகளே விண்ணப்பித்து விடுங்கள்.



விண்ணப்ப கட்டணம்



கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.300, ஆதிதிராவிட, பழங்குடியின, மாற்றுத்திறனாளி மாணவர்கள் ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும். தொழில்முறை படிப்புகளுக்கு விண்ணப்பிப்போர் ரூ.1,000, ஆதிதிராவிட, பழங்குடியின, மாற்றுத்திறனாளிகள் ரூ.500 கட்டணமாக செலுத்தினால்போதும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கட்டணம் ரூ.5 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



10,848 இடங்கள்தொழில்முறை படிப்புகளில் 5 ஆயிரத்து 229 இடங்களும், கலை அறிவியல் படிப்புகளில் 4 ஆயிரத்து 320 இடங்களும், நுண்கலை படிப்புகளில் 90 இடங்களும், இன்ஜினீயரிங் கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு 292 இடங்களும் உள்ளன. நீட் தேர்வு அடிப்படையிலான பாடப்பிரிவுகளில் 917 இடங்களும் உள்ளன. அதாவது 10 ஆயிரத்து 848 இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us