இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலால் நாட்டின் சிறந்த வேளாண் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வாய்ப்புகள் மிகுந்த பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன.
முக்கியத்துவம்:
இப்பல்கலைக்கழகத்தின் 19 உறுப்பு கல்லூரிகள், 38 ஆராய்ச்சி நிலையங்களில் 14 இளநிலை பட்டப்படிப்புகள், 33 முதுநிலை பட்டப்படிப்புகள், 28 ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும், 28 தனியார் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை கலந்தாய்வு வாயிலாக நிரப்பப்படுகின்றன.
இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.எஸ்சி.,-(ஹானர்ஸ்) அக்ரிகல்ச்சர், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) ஹார்ட்டிகல்ச்சர், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) புட், நியூட்டிரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) பாரஸ்ட்ரி, பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) செரிகல்ச்சர், பி.டெக்., -அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங், பி.டெக்.,-பயோடெக்னாலஜி, பி.எஸ்சி.,-அக்ரிபிசினஸ் மேனேஜ்மெண்ட், பி.டெக்.,-புட் டெக்னாலஜி, பி.டெக்.,-எனர்ஜி அண்ட் என்விரான்மென்டல் இன்ஜினியரிங். அக்ரிகல்ச்சர் மற்றும் ஹார்ட்டிகல்ச்சர் படிப்புகள் தமிழ் வழியிலும் பிரத்யேகமாக வழங்கப்படுகின்றன.
கால அளவு: 4 ஆண்டுகள்
கல்வித்தகுதி:
12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். சில படிப்புகளுக்கு கணிதம் மற்றும் உயிரியல் பாடங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும் சில படிப்புகளில், தொழில்பிரிவு மாணவர்களும் சேரலாம். பி.சி., மற்றும் பி.சி.எம்., பிரிவினர் 12ம் வகுப்பில் 4 முதன்மை பாடங்களில் குறைந்தது 50 சதவீத கூட்டு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், எம்.பி.சி., மற்றும் டி.என்.சி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.சி.ஏ., மற்றும் எஸ்.டி., பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் போதும்.
மாணவர் சேர்க்கை முறை:
12ம் வகுப்பில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆன்லைன் வாயிலாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். விளையாட்டு பிரிவினருக்கான இடங்கள், முன்னாள் ராணுவத்தினருக்கான இடங்கள், அரசு பள்ளி ஒதுக்கீட்டு இடங்கள், என்.ஆர்.ஐ., இடங்கள் மற்றும் இதர சிறப்பு ஒதுகீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாக நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://tnau.ac.in/ugadmission/ எனும் பக்கத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 9
விபரங்களுக்கு:
இணையதளம்: www.tnau.ac.in
இ-மெயில்: ugadmissions@tnau.ac.in
தொலைபேசி: 0422-6611345, 6611346,