ஓபோ மற்றும் கவுன்டர்பாயின்ட் நடத்திய சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் 4 பேரில் 3 பேருக்கு &'நோமோபோபியா’ என்ற மொபைல்போன் பயன்படுத்த முடியாமல் போய்விடுமோ என்ற பயம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. இத்தகைய அச்சம் பெரும்பாலும் குறைந்த பேட்டரியின் காரணமாக ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், 46 சதவீதம் பேர் தினமும் இருமுறை தங்கள் மொபைல் போன்களை சார்ஜ் செய்வதாகவும், 92 சதவீதம் பேர் பேட்டரி டிஸ்சார்ஜ் பிரச்சனைகளைச் சமாளிக்க &'பவர்-சேவிங்’ முறையை பயன்படுத்துவதாகவும், 60 சதவீத ஸ்மார்ட்போன் பயனாளர்கள் தங்களின் தற்போதைய பேட்டரி சிறந்ததாக இல்லை என்பதற்காக புதிய போனை வாங்க இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
’நோமோபோபியா’வை எதிர்த்து போராடவும், நீண்ட கால, அதிக திறன் கொண்ட, நீடித்திருக்கக்கூடிய பேட்டரி கொண்ட சாதனத்திற்கான தேவையை பூர்த்தி செய்யவும், எப்23 5ஜி என்ற பிரத்யேக மொபைல்போனை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஓபோ தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி தமியன்த் கானோரியா கூறியுள்ளார்.