தமிழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

தமிழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைமே 25,2023,13:29 IST

எழுத்தின் அளவு :

தஞ்சாவூரில் செயல்படும் தமிழ் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பல்வேறு முழுநேர பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணந்த பட்டப் படிப்புகள்: எம்.ஏ., - இலக்கியத்துறை, நாடகத்துறை, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை.


கால அளவு: 5 ஆண்டுகள்முதுநிலை பட்டப்படிப்புகள்: 


எம்.ஏ., - தமிழ், சிற்பம், இசை, நாடகம் மற்றும் அரங்கக்கலை, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியியல், தத்துவம், சமூகப்பணி, மொழியியல், மானுடவியல் மற்றும் பழங்குடியியல்எம்.எஸ்சி., - சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல், கணிப்பொறி அறிவியல், நிலத்தியல்


கால அளவு: 2 ஆண்டுகள்பயிற்று மொழி: தமிழ்தகுதிகள்: பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். விரிவான விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து, பதிவாளர் (பொ), தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613010 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும். குறிப்பு: விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளில் இருந்து ஒரு வார காலத்திற்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.தமிழ் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுநிலை தமிழ் மற்றும் 2 ஆண்டு முதுநிலை தமிழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளுக்கு அந்த நிறுவனத்தில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 


ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் - மே 31


முதுநிலை படிப்புகள் - ஜூன் 20விபரங்களுக்கு: www.tamiluniversity.ac.inAdvertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us