சென்னை: தினமலர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், கோவை வழங்கும் மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் உயர்கல்வி குறித்த ஆலோசனைகளை அள்ளி வழங்கும் வழிகாட்டி நிகழ்ச்சி, ஏப்., 4ல் சென்னை சேப்பாக்கம், கலைவாணர் அரங்கில் துவங்குகிறது.
பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்த ஆலோசனை நிகழ்ச்சியில், 20க்கும் மேற்பட்ட கல்வி ஆலோசகர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில்துறை வல்லுனர்கள் பங்கேற்று, பல்வேறு படிப்புகள் மற்றும் துறை சார்ந்த வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளிக்கின்றனர்.
வாய்ப்புகள் ஏராளம்
வரும் 2026- 27ம் ஆண்டில் வாய்ப்பு மிகுந்த துறைகள், வருங்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பங்கள், படிக்கும்போதே வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
ட்ரோன் தொழில்நுட்பம், செயற்கை அறிவுத் திறன், &'குவாண்டம் கம்ப்யூட்டிங், ஐ.ஓ.டி., கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா சயின்ஸ், பிக் டேட்டா, மிஷின் லேர்னிங்&' உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.
ஆர்க்கிடெக்சர், சட்டம், சி.ஏ., வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் துறை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள், மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் படிப்புகள், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட இன்ஜினியரிங் துறை வாய்ப்புகள், தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகள் மற்றும் பிரத்யேக கல்வி நிறுவனங்கள் குறித்தும் வழிகாட்டி நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்கப்படுகிறது.
மேலும், &'ஜே.இ.இ., நீட்&' போன்ற தேசிய நுழைவுத்தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள், &'கிளாட், நாட்டா, கேட்&' போன்ற நுழைவுத் தேர்வுகளின் முக்கியத்துவம், உதவித்தொகை வாய்ப்புகள் குறித்தும் நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., - ஐ.சி.டி., நிப்பர், எய்ம்ஸ், ஜிப்மர், ஐ.எஸ்.ஐ., ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கின்றனர்.
கல்வி கண்காட்சி
இந்நிகழ்ச்சியில் பொறியியல், கலை, அறிவியல், மேலாண்மை, கட்டடக்கலை, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., சட்டம், சி.ஏ., கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் உட்பட ஏராளமான துறை சார்ந்த கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகங்களின் &'ஸ்டால்&'கள் இடம்பெறுகின்றன.
இந்நிகழ்ச்சியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் இலவசமாக பங்கேற்கலாம். சென்னை மட்டுமின்றி, கோவை, மதுரை, புதுச்சேரி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
&'ஸ்பான்சர்&'கள்
&'தினமலர்&' மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள்-, கோவை நடத்தும் வழிகாட்டி நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர்.ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், கோவை மற்றும் அம்ரிதா விஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனங்கள் &'ஸ்பான்சர்&'களாக உள்ளனர்.
மேலும், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சாய்ராம் கல்வி நிறுவனங்கள், நியூபிரின்ஸ் ஸ்ரீ பவானி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி அண்டு அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், பிரின்ஸ் இன்ஜினியரிங் காலேஜ் ஆகிய கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.
சென்னையில் கலைவாணர் அரங்கிலும், கோவையில் கொடிசியா தொழில்காட்சி வளாகத்திலும், ஏப்., 4 முதல் 6ம் தேதி வரை, காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காலை மற்றும் மாலையில், கருத்தரங்கம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்க www.kalvimalar.com இணையதளத்தில் உடனே பதிவு செய்யலாம் அல்லது 91505 74441 என்ற வாட்ஸ் ஆப் எண் வாயிலாகவும் பதிவு செய்யலாம். அனுமதி இலவசம்.
நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கும் மாணவர்கள், லேப்டாப், டேப், வாட்ச் ஆகிய பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் உண்டு!