நியூட்ரிஷன் டயட்டிக்ஸ் படிக்கும் நான் எங்கு வேலை பெறலாம்? | Kalvimalar - News

நியூட்ரிஷன் டயட்டிக்ஸ் படிக்கும் நான் எங்கு வேலை பெறலாம்?ஜனவரி 25,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

பி.எஸ்சி., நியூட்ரிஷன் டயட்டிக்ஸ் படிக்கும் நீங்கள் கட்டாயம் உங்கள் துறையில் பட்ட மேற்படிப்பு படிக்க வேண்டும். இல்லாத போது உங்களது சிறப்புப் படிப்பானது மற்றுமொரு பட்டப்படிப்பாக மட்டுமே உங்களுக்கு உதவும். இதைக் கொண்டு வேலை பெறுவது கடினம்.

இதற்கு முன்பு நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் தற்போது நீங்கள் படித்து வரும் படிப்பை மிக நன்றாகப் படிக்க வேண்டும். அப்படியானால் அதிக மதிப்பெண் பெற வேண்டுமென்பதில்லை.

பாடங்களை நன்றாக புரிந்து மனதில் பதியுமாறு படிக்க வேண்டும். நுண்ணிய அறிவு பெற்றவர் தான் பட்ட மேற்படிப்பு படிக்கும் போது அதில் மிளிர முடிகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள். பொதுவாக நமது படிக்கும் முறையானது அதிக மதிப்பெண் பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்கிறது. ஆனால் பாட அறிவு என்பது மிக முக்கியமான தேவை.

பட்ட மேற்படிப்பு படித்தால் உங்களுக்கு உணவு ஆய்வகங்கள், பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் சுற்றுலா நிறுவனங்கள் போன்றவற்றில் பணி வாய்ப்புகள் கிடைக்கலாம்.

இதுபோன்ற படிப்பை முடிப்பவர்கள் பாட அறிவு தவிர சிறப்பான தகவல் தொடர்புத் திறன், எளிதில் பழகும் குணம், தலைமைப் பண்புகள், கூடுதல் மொழித் திறன், பல்வேறு நாடுகளின் உணவுப் பழக்க வழக்கம் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே படிக்கும் காலத்திலேயே இவற்றைப் பெற முயற்சியுங்கள். அடிப்படையில் நல்ல பொது அறிவும் தேவை. இங்கே நாம் குறிப்பிட்டிருக்கும் தகுதிகள், திறன்கள் மற்றும் குண நலன்களைப் பெறும்போது இத்துறை உங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us