நெஸ்ட் தேர்வு | Kalvimalar - News

நெஸ்ட் தேர்வுமார்ச் 24,2023,17:27 IST

எழுத்தின் அளவு :

என்.ஐ.எஸ்.இ.ஆர்., புவனேஸ்வர் மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற நடத்தப்படும் தேர்வு, நேஷனல் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட் - என்.இ.எஸ்.டி.,

அறிமுகம்:


புவனேஸ்வரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்டு ரிசர்ச் - என்.ஐ.எஸ்.இ.ஆர்., இந்திய அரசின் அணு சக்தி துறை- டி.ஏ.இ.,யின் கீழ் செயல்படும் ஓர் தன்னாட்சி நிறுவனம். அதேபோல், டி.ஏ.இ.,யின் கீழ் செயல்படும் மற்றுமொரு நிறுவனம் மும்பை பல்கலைக்கழகத்தின் ‘சென்டர் பார் எக்ஸ்லன்ஸ் இன் பேசிக் சயின்சஸ் - சி.இ.பி.எஸ்.,’. இந்த கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., - உயரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் படிப்புகளின் மாணவர் சேர்க்கை, என்.இ.எஸ்.டி., தேர்வு வாயிலாக நடைபெறுகிறது.உதவித்தொகை: இப்படிப்புகளில் சேர்க்கை பெறும் மாணவர்கள் ‘இன்ஸ்பயர்’ அல்லது ‘திஷா’ புரொகிராம் வாயிலாக ஆண்டுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை பெறும் வாய்ப்பு உண்டு. மேலும், கோடைகால இன்டர்ன்ஷிப்பிற்காக ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.விண்ணப்பிக்கும் முறை: www.nestexam.in எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு நேரம்: 3:30 மணிநேரம்தேர்வு மையங்கள்: நாடு முழுவதிலும் அனைத்து முக்கிய நகரங்கள் உட்பட மொத்தம் 120 மையங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.தேர்வு முறை: ஆன்லைன் வாயிலாகவே இத்தேர்வு நடத்தப்படுகிறது.விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 17தேர்வு நாள்: ஜூன் 24விபரங்களுக்கு: www.nestexam.inAdvertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us