ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு | Kalvimalar - News

ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்புமார்ச் 17,2023,16:53 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலையில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.தேசிய தேர்வு முகமையின் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, அடிப்படையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த பிப்ரவரி 9ம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.இதில், 2023-24 கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த முதுநிலை திட்டங்களில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் https://cuet.samarth.ac.in/. இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். www.pondiuni.edu.in/admissions-2023-24 என்ற முகவரியில் உள்ள படிப்புகளுக்கான தகுதி அளவுகோல்கள் மற்றும் தேவையான பாடங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை திட்டங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கு 30ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் விவரங்களில் திருத்தம் செய்ய வரும் 1 முதல் 3 ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை பல்கலைக்கழக உதவி பதிவாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us