ஜெர்மன் உதவித்தொகைமார்ச் 16,2023,16:43 IST
எழுத்தின் அளவு :
ஜெர்மனியில் உள்ள
பல்கலைக்கழகங்கள்
மற்றும் ஆராய்ச்சி
நிறுவனங்களில் உயர்கல்வி
மற்றும் ஆய்வு
மேற்கொள்ள விரும்பும்
பட்டதாரிகள் மற்றும்
முனைவர் பட்டம்
பெற்றவர்களை இலக்காக
கொண்டு டி.ஏ.ஏ.டி.,
உதவித்தொகை
வழங்கப்படுகிறது.
ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் உயர்கல்வி மற்றும் ஆய்வு மேற்கொள்ள விரும்பும் பட்டதாரிகள் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்களை இலக்காக கொண்டு டி.ஏ.ஏ.டி., உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், ஜெர்மன் கல்வி பரிவர்த்தனை சேவை - டி.ஏ.ஏ.டி., ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஜெர்மன், சர்வதேச மாணவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு உதவித்தொகை அளிக்கிறது. சில திட்டங்களில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளுக்கும் நிதியளிக்கப்படுகின்றன.
உதவித்தொகை திட்டங்கள்:
டி.ஏ.ஏ.டி.,யின் பிரதான உதவித்தொகை திட்டங்கள் மட்டுமின்றி குறிப்பிட்ட மாணவர்களுக்கு பிரத்யேக திட்டங்களும் உண்டு. குறிப்பாக, பிறந்த நாட்டில் கல்வி அல்லது பிற உரிமைகள் மறுக்கப்படும் அபாயத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் முனைவர் பட்டதாரிகளுக்கு ஹில்ட் டொமின் திட்டத்தில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.
சர்-பிளேஸ் மற்றும் மூன்றாம் நாடு திட்டங்கள் வாயிலாக, மாணவர்கள், இளம் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களின் சொந்த நாட்டில் பட்டப்படிப்பு, முனைவர் பட்டம் மேற்கொள்வதற்கு நிதி வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், விண்ணப்ப காலக்கெடுவிற்குள் தகுதியுள்ள உதவித்தொகை திட்டத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அத்தகைய விண்ணப்பங்கள் தன்னார்வத் தேர்வுக் குழுக்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, உதவித்தொகை ஒதுக்கீடு குறித்தும் முடிவு செய்யப்படுகின்றன.
உதவித்தொகை விபரம்: * ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
* முதுநிலை மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக 934 யூரோக்கள் வழங்கப்படுகின்றன.
* முனைவர் பட்டத்தின் கீழ் வரும் மாணவர்கள் மாதாந்திர உதவித்தொகையாக 1,200 யூரோக்களை பெறலாம்.
* மாணவர்களுக்கு மருத்துவ காப்பீடும் வழங்கப்படுகிறது.
* முனைவர் மற்றும் முதுநிலை திட்டத்தின் கீழ் உள்ள மாணவர்களுக்கு மேலும் சில பயண மானியங்கள் வழங்கப்படுகின்றன.
* பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் விடுதியில் கட்டணமின்றி தங்கும் சலுகையும் உண்டு.
தகுதிகள்:* இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்சம் 6 ஆண்டு காலத்திற்கு உட்பட்ட படிப்பாக இருத்தல் அவசியம்.
* குறைந்தது துறை சார்ந்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* ஜெர்மன் அல்லது ஆங்கில மொழியில் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அதற்கு ஏற்ப மொழி புலமை பெற்றிருக்க வேண்டும்.
மொழிப் புலமை:* ஜெர்மன் மொழியில் வழங்கப்படும் படிப்புகளுக்கு ஜெரிமன் மொழிப்புலமை பெற்றிருப்பது அவசியம்.
* பல்கலைக்கழகத்தின் தேவைக்கு ஏற்ப ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
விபரங்களுக்கு: www.daad.de