சென்னை: சித்த மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு, முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்த நிலையில், அரசு கல்லுாரிகளில், 61 இடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், சுயநிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 350; அகில இந்திய ஒதுக்கீட்டில், 127; நிர்வாக ஒதுக்கீட்டில், 503 என மொத்தம், 1,041 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன.
இந்த இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும் 11ம் தேதி, சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளோரும் பங்கேற்கலாம்.
மேலும், நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், 15ம் தேதி சான்றிதழ்களுடன் நேரடியாக வந்து, கவுன்சிலிங்கில் பங்கேற்று, இடங்களை தேர்வு செய்யலாம் என, இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், விபரங்களுக்கு, https://tnhealth.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.