ஹிரோஷிமா பல்கலை உதவித்தொகை | Kalvimalar - News

ஹிரோஷிமா பல்கலை உதவித்தொகைஜனவரி 30,2023,12:09 IST

எழுத்தின் அளவு :

ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்பும் தகுதியுடைய வெளிநாட்டு மாணவர்கள் உதவித்தொகை பெறும் வாய்ப்பு உண்டு.

இப்பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

பாடப்பிரிவுகள்:
அப்ளைடு கெமிஸ்ட்ரி
கெமிக்கல் இன்ஜினியரிங்
எலக்ட்ரிக்கல், சிஸ்டம்ஸ் அண்டு கண்ட்ரோல் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்டு என்விரான்மெண்டல் சிஸ்டம்ஸ்
ஆர்க்கிடெக்சர்
சிவில் அண்டு என்விரான்மெண்டல் இன்ஜினியரிங்
இன்பர்மேடிக்ஸ் அண்டு டேட்டா சயின்ஸ்
ஸ்மார்ட் இன்னோவேஷன்

தகுதிகள்:
* ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் அல்லது அதனுடன் ஒப்பந்தம் செய்துள்ள கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டம் பெற்ற அல்லது தற்போது படித்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவராக இருத்தல் வேண்டும். இப்பல்கலைக்கழகத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* ஜப்பானில் உயர்கல்வி கற்பதோடு ஹிரோஷிமாவில் வேலை செய்ய விருப்பம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
* ஜப்பானிய மொழி தெரிந்த அல்லது கற்கும் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
* டோபல் அல்லது ஐ.இ.எல்.டி.எஸ்., போன்ற ஆங்கில மொழிப்புலமை பரிசோதனை தேர்வில் போதிய மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம்.

உதவித்தொகை விபரம்:
உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் சுமார் ரூ.64 ஆயிரம் வீதம் மொத்தம் 24 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:
உரிய தகுதி உள்ள மாணவர்கள் தேவையான சான்றிதழ்களுடன் https://www.hiroshima-u.ac.jp/en/nyugaku எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31

விபரங்களுக்கு:
https://annauniv.edu/pdf/hiro2023.pdf

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us