சென்னை: பிளஸ் 2 பொது தேர்வு முடியும் வரை, அரசு பள்ளி மாணவர்களுக்கு, &'நீட்&' தேர்வுக்கான இலவச பயிற்சியை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் அறிவியல் பிரிவு மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, &'நீட்&' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தேர்வுக்கு தனியார் பள்ளி மாணவர்கள், அதிக கட்டணம் செலுத்தி, தனியார் மையங்களில் பயிற்சி பெறுவதால், அதிக அளவு மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுகின்றனர்.
அவர்களுக்கு இணையாக, அரசு பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேரும் வகையில், பள்ளிக் கல்வி துறை சார்பில், இலவச நீட் பயிற்சி வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, நீட் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் பிளஸ் 2 பொது தேர்வு நடக்க உள்ளதால், பொது தேர்வு முடியும் வரையில், நீட் பயிற்சி வகுப்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, பள்ளிக் கல்வி துறை முடிவு செய்துஉள்ளது.
பிளஸ் 2 பொது தேர்வு முடிந்த பின், கோடை விடுமுறையில், நீட் பயிற்சி வகுப்புகளை முழு வீச்சில் நடத்த, நீட் ஒருங்கிணைப்பாளர்களுக்கு, பள்ளிக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.