நிச்சயம் முடியும். இந்தியன் சிவில் சர்விசஸ் தேர்வு, இன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு ஆகியவற்றை எழுதி வெற்றி பெற்றால் சிறப்பான அதிகாரி நிலைப் பணி வாய்ப்பை நீங்கள் ரயில்வேயில் பெறலாம். தவிர ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டுகள் பலவும் அவ்வப்போது அறிவிக்கும் இன்ஜினியரிங் பணி வாய்ப்புகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
பொதுவாக இந்த வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வில் இன்ஜினியரிங் பாடங்களிலிருந்தே கேள்விகள் அமைவதால் இப்போதிருந்தே தயாராவது முக்கியம்.