சென்னை: பிளஸ் 2 படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள், உயர்கல்வியில் சேர விருப்பப்படும் படிப்பு குறித்து, விபரம் சேகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும், அரசு மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் எந்த படிப்பில் சேர விரும்புகின்றனர் என்ற விபரத்தை, மாணவர்களிடம் திரட்டுமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
இந்த விபரங்கள் அடிப்படையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, அவர்களின் படிப்பு சார்ந்த கல்லுாரிகள், மாணவர் சேர்க்கை விபரங்கள் அடங்கிய கையேடு போன்றவற்றை வழங்க முடிவு செய்துள்ளதாக, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
மேலும், அந்த படிப்பு சார்ந்த வழிகாட்டுதலை மாணவர்களுக்கு வழங்கவும், பள்ளிக்கல்வி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.