சென்னை: குரூப் - 3ஏ பதவியில், எழுத்து தேர்வுக்கான தேர்வு மையங்களின் மாவட்ட எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், &'குரூப் - 3ஏ&' பதவிக்கான எழுத்து தேர்வு, ஜன., 28ல், 38 மாவட்ட தேர்வு மையங்களில் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது நிர்வாக காரணங்களால், தேர்வு மையங்கள் அமைய உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை, 15 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.