சென்னை: ஊரக மாணவர் திறனறி என்ற &'டிரஸ்ட்&' தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழக கிராம பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்க &'டிரஸ்ட்&' என்ற ஊரக திறனறி தேர்வு தமிழக பள்ளிக்கல்வி துறையால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு டிச. 10ம் தேதி மாநிலம் முழுதும் நடக்க உள்ளது.
தேர்வுக்கான விண்ணப்பங்கள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வழியே ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன்படி தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு தேர்வு மையத்தில் அனுமதிக்க வேண்டிய ஹால் டிக்கெட் நேற்று வெளியிடப்பட்டது.
ஹால்டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்குமாறு அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் செல்வக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தேர்வர்களின் ஹால் டிக்கெட்டில் பெயர் பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் இருந்தால் சிவப்பு நிற மையால் திருத்தி பள்ளி தலைமை ஆசிரியர் சான்றொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.