சென்னை: ஜி.எம்., செஸ் அகாடமி சார்பில், சிறுவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி., வளாகத்தில் நடந்தது.
இதில், 8, 10, 12, 15 மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும், தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.அனைத்து போட்டிகள் முடிவில், மொத்தம் 125 பேருக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அவர்களுடன், போட்டியில் பங்கேற்ற 8 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள், 360 பேருக்கு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டனர்.