கிரெடிட் மதிப்பெண் வழங்க வருகிறது புதிய நடைமுறை | Kalvimalar - News

கிரெடிட் மதிப்பெண் வழங்க வருகிறது புதிய நடைமுறைநவம்பர் 22,2022,10:42 IST

எழுத்தின் அளவு :

சென்னை: கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, கிரெடிட் மதிப்பெண் வழங்குவதற்கான புதிய முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, யு.ஜி.சி.,அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., சார்பில், பல்கலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள ஒவ்வொரு அம்சமும், கல்லுாரி மற்றும் பல்கலை படிப்புகளில் படிப்படியாக அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பில், கிரெடிட் மதிப்பெண் வழங்கும் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுஉள்ளன.

இது குறித்து, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள் தரப்பில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களில், விரிவான தொழிற்கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.

புதிய கிரெடிட் மதிப்பெண் முறை குறித்து, மண்டல வாரியாக ஐ.ஐ.டி.,க்கள் சார்பில் கருத்தரங்கம் நடத்தப்படும். அவற்றில் சம்பந்தப்பட்ட மண்டலங்களில் உள்ள பல்கலை துணைவேந்தர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us