மின்னணு கற்பித்தல் முறை; ஐ.ஐ.டி.,யுடன் அரசு ஒப்பந்தம் | Kalvimalar - News

மின்னணு கற்பித்தல் முறை; ஐ.ஐ.டி.,யுடன் அரசு ஒப்பந்தம்நவம்பர் 22,2022,10:25 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழக பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், &'டிஜிட்டல்&' முறை கற்பித்தல் தொடர்பாக, சென்னை ஐ.ஐ.டி., எனும் இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன், பள்ளிக் கல்வித் துறை ஒப்பந்தம் செய்து உள்ளது.

இதன்படி, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் முறையில், கற்பித்தல் அம்சங்கள் உருவாக்கப்பட உள்ளன.

சென்னை ஐ.ஐ.டி., தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ராபர்ட் பாஷ் மையத்தினருடன் இணைந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து, பள்ளிக் கல்வி கமிஷனர் நந்தகுமார் கூறுகையில், &'&'அரசு பள்ளிகளில் ஆரோக்கியமான போட்டியுடன் கூடிய, கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளை நோக்கிதிட்டமிடுகிறோம்.

&'&'இதை நடைமுறைக்கு கொண்டு வர, சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து செயல்படுவது மிகவும் உதவியாக இருக்கும். இந்த டிஜிட்டல் கற்றல், கற்பித்தல் முறை, தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்,&'&' என்றார்.

இந்த ஒப்பந்தம் குறித்து, சென்னை ஐ.ஐ.டி., மேலாண்மை படிப்புகள் துறை இணை பேராசிரியர் நந்தன் சுதர்சனம் கூறுகையில், &'&'கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர் தொழில்நுட்பத்தில், டிஜிட்டல் கற்பித்தல் முறையை ஏற்படுத்த உள்ளோம். தரவு அறிவியல் முறையில் கல்வியின் தரத்தையும் மேம்படுத்த உள்ளோம்,&'&' என்றார்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us