திறன்களின் மையமாக இந்தியா மாறும் | Kalvimalar - News

திறன்களின் மையமாக இந்தியா மாறும்நவம்பர் 21,2022,10:03 IST

எழுத்தின் அளவு :

சர்வதேச அளவில் தேவைப்படும் திறனாளர்களை உருவாக்கும் மையமாக இந்தியாவை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு கொள்கை வகுக்கப்பட்டு வருவதாக, மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழிமுனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், மலேசியா, மொரீஷியஸ், சிங்கப்பூர், தான்சானியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய 10 நாடுகளுக்கான தூதர்களுடன் நான்கு மத்திய அரசு துறைகளுடன் இணைந்து சர்வதேச திறன் உச்சி மாநாடு சமீபத்தில் நடந்தது.



அதில், ’பல்வேறு நாடுகளின் திறன்மிக்க மனிதவளத் தேவைகளை அடையாளம் காண உலகளாவிய திறன்-தொகுப்புத் தேவைகளின் வரைபடம் மேற்கொள்ளப்படும். இந்தியாவின் சார்பாக பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது திறன் தேவைகளை அடையாளம் காண்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்கும்’ என்றும் அமைச்சர் பிரதான் தெரிவித்துள்ளார்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us