பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் | Kalvimalar - News

பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்அக்டோபர் 03,2022,15:42 IST

எழுத்தின் அளவு :

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் தமிழ் பண்பாட்டு மரபு மற்றும் அறிவியல் தொடர்பியலை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.



பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்க நிறுவன செயலாளர் சேயோன், ஓய்வு பெற்ற கூடுதல் தலைமை செயலர் டி.எஸ். ஸ்ரீதர், தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குனர் திலகவதி, பல்கலை இதழியல் தொடர்புகள் துறை தலைவர் ஜெனிபா கையெழுத்திட்டனர்.



துணைவேந்தர் பேசுகையில், "அறிவியல் கூறுகளை உலகறிய செய்யும் வகையில் கருத்தரங்கு, பயிலரங்கு, உரையரங்கு, கவியரங்கு நடத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்" என்றார். சிண்டிகேட் உறுப்பினர் நாகரத்தினம், டீன் சதாசிவம், உதவி பேராசிரியர்கள் பாலசுப்ரமணியம், ராஜேஷ்குமார் பங்கேற்றனர்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us