கல்லூரியில் இளநிலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்கள் மத்திய அரசின் உதவித்தொகையை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் திறன் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இளநிலை மாணவர்களுக்கு ரூ. 10, ஆயிரமும், முதுகலை மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதற்கு, பிளஸ் 2 முடித்து நடப்புக் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் அடி வைத்துள்ள மாணவர்கள் https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அப்போது, ஆதார், மதிப்பெண் பட்டியல், படிக்கும் கல்வி நிறுவனத்தின் பெயர் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு எண் உட்பட பல்வேறு தகவல்களை பதிய வேண்டும். கடந்த 2017 முதல் 2021ம் ஆண்டு வரை விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டவர்கள், புதுப்பித்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வரும் அக்டோபர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களை https://www.tndce.tn.gov.in/en அல்லது https://scholarships.gov.in/public/schemeGuidelines/Guidelines_DOHE_CSSS.pdf என்ற இணைய தள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம்.