பள்ளிகளில் ஜாதி பாகுபாடு? அமைச்சர் கடும் எச்சரிக்கை! | Kalvimalar - News

பள்ளிகளில் ஜாதி பாகுபாடு? அமைச்சர் கடும் எச்சரிக்கை!செப்டம்பர் 21,2022,14:46 IST

எழுத்தின் அளவு :

சென்னை: &'&'அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர், பணியாளர், மாணவர் இடையே ஜாதி பாகுபாடு புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் எச்சரித்துள்ளார்.



அவர் அளித்த பேட்டி:



தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள, பாஞ்சாகுளம் பகுதி யில் நடந்த ஜாதி பாகுபாடு சம்பவம் குறித்து, முதல்வர் உத்தரவின்படி தாமதமின்றி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளியில், ஜாதி பாகுபாடு நடந்ததா என்பது குறித்து, விசாரணை நடத்தப்படுகிறது.



பள்ளிகளில், ஆசிரியர், மாணவர், பணியாளர் ஜாதி பாகுபாடு நடக்கிறதா என்பது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர் உள்ளிட்டோர் முறையாக கண்காணிக்க வேண்டும். பள்ளிகள், அனைவரும் சமத்துவமாக இருக்கும் இடம். அங்கு, ஜாதி பாகுபாடு நடப்பதாக புகார் எழுந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.



அரசு தொடக்க பள்ளிகளில், முதல்வர் துவங்கி வைத்த காலை சிற்றுண்டி திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை, ஒவ்வொரு நாளும் சிற்றுண்டியில் அதிக அளவுக்கு காய்கறிகள் சேர்த்து வழங்க அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us