துணை மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங் துவக்கம் | Kalvimalar - News

துணை மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங் துவக்கம்செப்டம்பர் 21,2022,14:40 IST

எழுத்தின் அளவு :

சென்னை: துணை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் துவங்குகியது.

தமிழகத்தில் துணை மருத்துவ பட்டப்படிப்பு, மருந்தாளுனர்கள், டிப்ளமா நர்சிங், டிப்ளமா ஆப்டோமெட்ரி, பாராமெடிக்கல் டிப்ளமா சான்றிதழ் படிப்புகளுக்கு, 121 அரசு மருத்துவ கல்லுாரிகளில் 2,526 இடங்கள் உள்ளன.அதேபோல், 348 சுயநிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 15 ஆயிரத்து 307 இடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்கு 2022 - 23ம் கல்வியாண்டிற்கு 87 ஆயிரத்து 764 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, இன்று முதல் ஆன்லைன் கவுன்சிலிங் நடக்கிறது.சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் இன்று காலை, 10:00 மணி முதல், நாளை மாலை 5:00 மணி வரை நடக்கிறது. அதற்கான முடிவுகள், வரும் 23ம் தேதி வெளியிடப்பட்டு, 24ம் தேதி சேர்க்கை ஆணையை பெற்று கொள்ளலாம். பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங், 24ம் தேதி காலை 10:00 முதல், 27ம் தேதி மாலை 5:00 வரை நடக்கிறது. இதில், &'கட் ஆப்&' மதிப்பெண் 200 முதல் 170 பெற்ற, தரவரிசை பட்டியலில் ஒன்று முதல் 11 ஆயிரத்து 380 வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். இவர்களுக்கான முடிவுகள், வரும் 28ம் தேதி வெளியிடப்பட்டு, 29ம் தேதி சேர்க்கை ஆணை பெறலாம்.அதேபோல், தரவரிசை பட்டியலில் 11 ஆயிரத்து 381 முதல் 28 ஆயிரத்து 583 வரை உள்ளவர்கள், வரும் 29 முதல் அக்., 2 வரை ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இவர்களுக்கான முடிவுகள் அக்., 3ம் தேதி வெளியிடப்பட்டு, அன்றைய தினமே சேர்க்கை ஆணையும் வழங்கப்படும். இடங்கள் பெற்ற மாணவர்கள், அக்., 10ம் தேதிக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும். கவுன்சிலிங்கில் பங்கேற்கும் முறைகள் போன்ற விபரங்களை, tnmedicalselection.net, www.tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us