தொலைநிலை கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கவனத்திற்கு... | Kalvimalar - News

தொலைநிலை கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கவனத்திற்கு...செப்டம்பர் 20,2022,16:34 IST

எழுத்தின் அளவு :

தொலைநிலை மற்றும் திறந்தநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் உயர்கல்வி நிறுவனம் மற்றும் படிப்புகளின் அங்கீகாரத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.



அங்கீகாரமற்ற மற்றும் போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலில் மாணவர்கள் சேர விரும்பும் கல்வி நிறுவனம் இடம்பெற்றுள்ளதா என்பதை பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியம். 



இன்ஜினியரிங், மருத்துவம், பிசியோதெரபி, பார்மசி, ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ஹார்ட்டிகல்ச்சர், சட்டம், வேளாண்மை, கேட்டரிங் டெக்னாலஜி, ஏர்கிராப்ட் மெயின்டெனன்ஸ், விசுவல் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் உட்பட ஆன்லைன் மற்றும் தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கக்கூடாத 17 படிப்புகளை யு.ஜி.சி., பட்டியிலிட்டுள்ளது. 



இவை குறித்து யு.ஜி.சி.,யின் இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.




Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us