வேளாண் கல்லுாரிக்கு ரொக்கப் பரிசு | Kalvimalar - News

வேளாண் கல்லுாரிக்கு ரொக்கப் பரிசுஆகஸ்ட் 16,2022,13:09 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி: காரைக்கால் வேளாண் கல்லுாரிக்கு, சிறந்த சேவைக்கான முதல்வரின் ரொக்க பரிசு கேடயம் வழங்கப்பட்டது.



முக்கிய உணவு பயிரான நெல் விதைகள், தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்படுகிறது. இந்த இடைவெளியை குறைக்கும் வகையில், காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மை கல்லுாரி கடந்த 2015-16 ம் ஆண்டு தரமான விதை உற்பத்தியை முன்னெடுத்தது. 2021-22ம் ஆண்டில் அதனை தீவிரப்படுத்தியது.



இம்முயற்சியை ஐ.சி.ஏ.ஆர். நிறுவனம் ஆய்வு செய்து, விதை உற்பத்தி தொழில்நுட்பத்திற்கு தர சான்றிதழ் வழங்கியது. இதன் காரணமாக நெல் விவசாயிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.


 


காரைக்கால் மாவட்டத்தில் 25 சதவீத தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நெல் உற்பத்தி 400 குவிண்டலாக அதிகரித்துள்ளது. இச்சேவையை பாராட்டி, சுதந்திர தின விழாவில் முதல்வரின் ரொக்கப்பரிசாக 2.50 லட்சம் ரூபாய், கேடயம் வழங்கப்பட்டது.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us