சென்னை: சுதந்திர தின கவிதை போட்டியை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.
நாட்டின், 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி, ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், தமிழ் வளர்ச்சி மையம் சார்பில், கவிதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
&'இந்திய சுதந்திரம் போற்றுவோம், தியாகிகளின் தியாகங்களை போற்றுவோம் மற்றும் பெற்ற சுதந்திரத்தை பேணி போற்றுவோம்&' என்ற தலைப்புகளில், கவிதைகள் எழுத வேண்டும். பி.எட்., - எம்.எட்., - எம்.பில்., மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்கலாம்.
நாளைக்குள் ஆன்லைனில் கவிதைகளை அனுப்ப வேண்டும். கவிதை அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் விதிகளை, www.tnteu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.