புதிய கண்டுபிடிப்புகள்: பல்கலையில் கண்காட்சி | Kalvimalar - News

புதிய கண்டுபிடிப்புகள்: பல்கலையில் கண்காட்சிஆகஸ்ட் 12,2022,18:21 IST

எழுத்தின் அளவு :

சென்னை: இன்ஜினியரிங் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து, அண்ணா பல்கலையில் கண்காட்சி நடத்தப்பட்டது.

அண்ணா பல்கலையின் வளாக கல்லுாரிகளான கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் எம்.ஐ.டி., ஆகிய கல்லுாரிகளின் மாணவர்கள், தங்களது இறுதி ஆண்டு படிப்புடன், பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளையும் மேற்கொள்வர். 



அந்த வகையில், இந்த ஆண்டு இன்ஜினியரிங் மாணவர்கள் கண்டுபிடித்த தொழில்நுட்ப பொருட்களின் கண்காட்சி, சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், &'டெக் எக்ஸ்போ&' என்ற பெயரில் நடந்தது.



அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ், கண்காட்சியை திறந்து வைத்தார்; மாணவ - மாணவியரின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு பாராட்டினார். 



இந்த நிகழ்வில், அண்ணா பல்கலை கல்லுாரிகளின் மாணவ - மாணவியர், தற்கால தொழில்நுட்பம் மற்றும் தேவைக்கு ஏற்ற கண்டுபிடிப்புகளை, அரங்குகளில் காட்சிக்கு வைத்திருந்தனர். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளும் வகையில், பல்வேறு தொழில் நிறுவனத்தினரும் வந்திருந்தனர்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us