இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களின் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் தினமலர் நாளிதழ் உங்களால் முடியும் நிகழ்ச்சியை சென்னையில் மீண்டும் நடத்துகிறது.
பி.இ., - பி.டெக்., படிக்க விரும்பும் பிளஸ் 2 வகுப்பு முடித்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். தற்போது விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும் நிலையில், சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதியும், பொது கலந்தாய்வு 25ம் தேதியும் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலந்தாய்வு நடைமுறைகள், ஆன்லைன் கலந்தாய்வு அணுகுமுறைகள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யும் விதம், &'சாய்ஸ் பில்லிங்&' செய்வது எப்படி, வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் படிப்புகள் எவை உட்பட மாணவர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.
அவற்றிற்கு தகுந்த ஆலோசனை வழங்கும் வகையில் &'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி&' உடன் இணைந்து &'தினமலர்&' உங்களால் முடியும் நிகழ்ச்சி, சென்னையில் வரும் 14ம் தேதி இரண்டு இடங்களில் நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சி குன்றத்துாரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி வளாகத்தில் வரும் 14ம் தேதி முதல் காலை 10:00 முதல் 1:00 மணி வரையிலும், அண்ணா நகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரியில் மாலை 3:00 முதல் 6:00 மணி வரையிலும் நடைபெறுகிறது.
கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வது குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து கிண்டி பொறியியல் கல்லுாரி பேராசிரியர் நாகராஜன் ஆகியோர் விளக்கம் அளிக்கின்றனர்.தொடர்ந்து மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கும் நிபுணர்கள் பதில் அளிக்கின்றனர்.
அனுமதி இலவசம்!
கல்வி மலர் www.kalvimalar.com இணைய தளத்தில் மாணவர்கள், தங்களது பெயர் மற்றும் மொபைல் எண் ஆகிய தகவல்களை அளித்து இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். 91505 74441 என்ற எண்ணில் &'வாட்ஸ் ஆப்&' வாயிலாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்களுடன் பெற்றோரும் பங்கேற்கலாம்.