அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கைஆகஸ்ட் 08,2022,13:29 IST

எழுத்தின் அளவு :

ஊட்டி: ஊட்டி அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஊட்டி அரசு கலை கல்லுாரி முதல்வர் எபினேசர் (பொ) அறிக்கை:நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அரசு கலை கல்லுாரி கலந்தாய்வு நடக்கும் நாட்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (8ம் தேதி) காலை, 9:30 மணி முதல் 11:00 வரை சிறப்பு இட ஒதுக்கீடு; 11:00 மணி முதல் தமிழ் மற்றும் ஆங்கில பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.10ம் தேதி காலை, 9:30 மணி முதல், 12:00 வரை தரவரிசை பட்டியலில், 1 முதல் 1000 வரை உள்ள மாணவர்களுக்கும்; 12:00 மணிமுதல், 1001 முதல் 1500 வரை பட்டியலில் உள்ளவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கும்.11ம் தேதி காலை, 9:30 மணி முதல், 12:00 வரை, 1501 முதல் 2500 வரையும்;மதியம், 2501 முதல் 3000 வரை கலந்தாய்வு நடக்கிறது. 12ம் தேதி, 11:00 மணி முதல், 3001 முதல், 4000 வரையும்; 16ம் தேதி காலை, 10:00 மணி முதல், 4001 முதல் 5000 வரை உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடக்கும்.17ம் தேதி காலை, 9:30 மணி முதல் தரவரிசை பட்டியலில், 5001 முதல் 5983 வரை உள்ள மாணவ, மாணவியருக்கு கலந்தாய்வு நடக்கிறது.கலந்தாய்வுக்கு, 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், ஜாதி சான்று, ஆதார் அட்டை, 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டுவர வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us