பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி, தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, &'வித்யார்த்தி பெலக்கு அத்யாயனா கேந்திரா&' எனும், &'மாணவர் கல்வி ஒளி&' திட்டத்தின் கீழ், 3, 5ம் வகுப்பு ஏழை மாணவ - மாணவியருக்கு, வரும் 15ம் தேதி முதல் இலவசமாக &'டியூஷன்&' எடுக்கப்படுகிறது.
இது குறித்து, பெங்களூரு மாநகராட்சி நல துறை கமிஷனர் ராம் பிரசாத் மனோகர் கூறியதாவது:
மாணவர் கல்வி ஒளி திட்டத்தின் கீழ், 3, 5ம் வகுப்பை சேர்ந்த மாணவ - மாணவியருக்கு, தினமும் மாலை 5:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை இலவச டியூஷன் எடுக்கப்படும். தற்போதைக்கு மாநகராட்சி பள்ளிகளில், மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரப்படும். இதை, அந்தந்த பகுதி தொண்டு நிறுவனங்கள் கண்காணிக்கும்.
மாணவர்கள் கல்விக்காக பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தேவையான பொருட்களை வழங்குவர். இளங்கலை, முதுகலை படிப்பு முடித்தவர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்துவர்.
இவர்களுக்கு, கவுரவ நிதியாக 1,500 ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு டியூஷனிலும், 20 முதல் 30 மாணவர்கள் சேர்க்கப்படுவர். இத்திட்டம் வரும் 15ம் தேதி பெங்களூரில் துவக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.